Left Handed Doctor - Translation

I read this in a reputed Tamil magazine. I had just translated the content into English and retold it in my style. 

நான் இதை ஒரு புகழ்பெற்ற தமிழ் இதழில் படித்தேன்.  அதை என் பாணியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளேன்...

[Updated June 2023] -- I  hope reading it will give  self-confidence  to many people.

இதை படிப்பதால் அது பலருக்கு தன்னம்பிக்கை தரும் என்று நம்புகிறேன்.

PART 1 --  Mr.Ramesh Kanna and Mrs.Santhi were a newly married couple. // திரு.ரமேஷ் கண்ணா மற்றும் திருமதி சாந்தி ஆகியோர் புதிதாக திருமணமான தம்பதியினர்.  

Mr. Ramesh was a qualified doctor. //திரு. ரமேஷ் ஒரு மருத்துவர்

Unfortunately, within 40 days after getting married, he met with a head injury. /துரதிர்ஷ்டவசமாக, திருமணமான 40 நாட்களுக்குள், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.  

It happened following a fall in his bathroom. // அவரது குளியலறையில் விழுந்ததைத் தொடர்ந்து இது நடந்தது.  

Due to this, his right hand and right leg lost its functions.// இதன் காரணமாக, அவரது வலது கை மற்றும் வலது கால் அதன் செயல்பாடுகளை இழந்தது.

But his mother, Mrs.Vanitha Sankaran kept on saying  POSITIVE THINGS to the newly married couple. // ஆனால் அவரது தாயார் திருமதி வனிதா சங்கரன் புதிதாக திருமணமான தம்பதியினருக்கு நேர்மறை விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தார். 

As a first job, she gave him a four-ruled note-book and asked him to practice writing with his LEFT HAND. // முதல் வேலையாக, அவர்  அவனுக்கு நான்கு  கோடுகள் போட்ட நோட்டு  புத்தகத்தை வாங்கி கொடுத்தார். அவனுடைய இடது கையால் எழுதப் பயிற்சி செய்யச் சொன்னார்.

A qualified doctor started to learn writing, once again, like a school kid, with his left hand.Wrote - A B C D.

ஒரு தகுதி பெற்ற மருத்துவர் தனது இடது கையால் மீண்டும் ஒரு பள்ளி குழந்தையைப் போல A B C, அ ஆ இ ஈ -- எழுத கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

It was really challenging to learn to write again with the left hand. 

அவருக்கு இடது கையால் மீண்டும் எழுத கற்றுக்கொள்வது மிகவும் சவாலானதாக இருந்தது. 

But he worked hard and succeeded. 

ஆனால் அவர் கடுமையாக உழைத்து அதில் வெற்றி பெற்றார்.  

Then he mastered writing using his left hand. 

பிறகு அவர் தனது இடது கையைப் பயன்படுத்தி எழுதுவதில் திறமை பெற்றார்.  

Then he even did higher studies in medicine. 

பின்னர் அவர் மருத்துவத்தில் உயர் கல்வி கூட படித்து முடித்தார்.

Now having over come his defect, he is working abroad as a Neurologist.

இப்போது அவரது குறைபாட்டை வென்று, அவர் ஒரு நரம்பியல் நிபுணராக வெளிநாட்டில் வேலை செய்கிறார்.

It may be a bit shocking to hear him say that he wanted to thank God for his accident.

தனது விபத்துக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புவதாக அவர் சொல்வதைக் கேட்பது, நமக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம்.

He says that it is only because of it he could realize the pains of his patients better and treat them with more "empathy" and understanding.

அதன் காரணமாகவே அவர் தனது நோயாளிகளின் வலிகளை நன்றாக உணர்ந்து, அவர்களுக்கு "பச்சாத்தாபம்" மற்றும் முழு புரிதலுடன் சிகிச்சையளிக்க முடிகிறது என்று அவர் கூறுகிறார்.

What a great soul ! என்ன ஒரு நல்ல ஆன்மா! 


PART 2

Hence, right from childhood parents should implant in their children, the character traits to fight back, in case something bad happens to them. 

ஆகவே, குழந்தை பருவத்திலிருந்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் மோசமான காரியம் வாழ்க்கையில் நடந்துவிட்டால், அதை எதிர்த்து போராடுவதற்கான  குணத்தை அவர்களுக்குள் விதைக்க வேண்டும்.  

They should have a fighting spirit and overcome their difficulties that they may face in life.

அவர்கள் ஒரு போராடும்  மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய சிரமங்களை சமாளிக்க தெரிந்து இருக்க வேண்டும்.

Hence, we should "not" always bring up children with luxuries and comforts ... 

எனவே, நாம் எப்போதும் ஆடம்பரங்களையும் வசதிகளையும் கொண்டு குழந்தைகளை வளர்க்கக்கூடாது.

... and always keep on protecting them.

மேலும் அவர்களை எப்போதும் பாதுகாத்துக்கொண்டே இருக்கக் கூடாது. 

Let them explore the world themselves. And learn what is good and what is bad. 

அவர்களே உலகை ஆராய்ந்து நல்லது கெட்டுகளை தெரிந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். 

Only then, they will develop skills to survive, even in case of hardships and adversities. 

அப்போதுதான், அவர்கள் தங்கள் வாழ்வில் கஷ்டங்கள் மற்றும் துன்பங்கள் ஏற்பட்டாலும்  போராடி உயிர்வாழும் திறன்களை வளர்த்துக் கொள் முடியும்.

If there is no electricity, a washing machine will not work. But, teach them to wash clothes by hands. 

மின்சாரம் இல்லை என்றால், ஒரு சலவை இயந்திரம் இயங்காது.   ஆகையால், கைகளால் துணிகளைக்  துவைக்க அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.  

If there is no electricity power, the grinder will not work. Its okay, let them learn to do it manually. 

மின்சார சக்தி இல்லை என்றால், கிரைண்டர் வேலை செய்யாது.  பரவாயில்லை, அதை கைமுறையாக செய்ய அவர்களுக்கு  கற்றுக்கொடுங்கள். 

If there is no petrol, a vehicle will not move, but let them also learn to ride a bicycle.

பெட்ரோல் இல்லை என்றால், ஒரு வாகனம் நகராது.  பரவாயில்லை  ஒரு நாள் சைக்கிளில் போகலாம். அப்படி ஏதோ ஒரு நாள் போக அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

And let it not look like a punishment and let it not upset them.  

அது ஒரு தண்டனையை போல் இருக்கக்கூடாது, அது அவர்களை வருத்தப்பட வைக்க கூடாது. 

They should not curse anyone. 

அவர்கள் யாரையும் சபிக்கக்கூடாது.  

They should just do it "differently" once in a while.

அவர்கள் அதை எப்போதாவது ஒரு முறை "வித்தியாசமாக" செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவே. 

They should know to overcome hurdles, and not to pray that there should not be any hurdle at all in their lives.

தடைகளைத் தாண்ட அவர்கள் அறிந்திருக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையில் எந்த தடையும் இருக்கக்கூடாது என்று அவர்கள் வேண்டக் கூடாது.

Hardships in their lives will make children to use their full talents and come up with innovative ideas.

அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் குழந்தைகளின் முழு திறமையையும் வெளிப்படுத்தவும்  புதுமையான தீர்வுகளை  கொண்டு வரவும்  உதவும்.

Remember,  "Necessity is the mother of invention"

நினைவில் கொள்ளுங்கள், "ஒரு அவசிய தேவையே எல்லா  கண்டுபிடிப்புகளுக்கும் பிறப்பிடம் அல்லது தாய்"

Let our children face difficulties in their life and become stronger persons. 

நம் குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொண்டு, வலிமையான நபர்களாக உருவாகட்டும்.  

Instead of being meek like goats they should be bold and courageous like the mighty lion.

ஆடுகளைப் போல சாதுவாக இருப்பதற்குப் பதிலாக அவர்கள் வலிமைமிக்க சிங்கத்தைப் போல தைரியத்துடன் இருக்க வேண்டும்.

WRITTEN [AROUND 2009] by

EZHILARASAN VENKATACHALAM, Salem 

GLOBAL ONLINE TAMIL BASED ENGLISH TRAINER


 


Comments

Popular posts from this blog

Fish can not climb tree / Psychology in Tamil EZHILARASAN CHILDCARE 0809 DUPLICATE

Childcare MENU 0514 EZHILARASAN VENKATACHALAM SALEM