FINLAND SCHOOLS METHOD WE SHOULD FOLLOW VENKATACHALAM SALEM CHILDCARE sandwich

Finland stands first in offering the world's best education.

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது.Finland stands first in offering the world's best education.


அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? - Let us see what is special in Finland's education system.

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது.- In Finland, they send a child to school only at the age of 7.
  
👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்ககள் தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. - For the next three years, they attend school only for half of the year and the rest of the days are holidays.

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். - The school working hours is also less.

அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. - And even in that time span, equal importance is given to others arts like music, painting, sports etc.

*** important ***
👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். - There is a rest room in each school.

படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம். -  If the children dont like to attend the class or feel tired, they can go there and take rest.

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது... பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது... Till 13 years, there is no ranking system, progress reports etc and of course, parents need not worry about signing on them.

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...- If the parents are interested in knowing about their child's performance at school, they will have to submit a requisition letter and then get the details.

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...Since there is no competition in studies, therefore there is no pressure on the students to get high marks.

சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை... The attitude of considering co-students as competitors in not there.

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை... There is no home-work at all for students.

** important ***
👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்... Students can do homework on any subject they like to do and bring.

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். - There will be a doctor in each school.

அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...He will individually check up each student and give advices.

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; There can  be only a maximum of 600 students in a school.

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்... There are no private schools at all in Finland. All the schools are run by the government.

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர். - So, 99 %  of the children get their primary education.

அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்.-And 94% of them opt for higher education.

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். -  However, these students who study in  a primary system without exams, always stand first in many international exams.

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் "பின்லாந்து" எப்போதும் முன்னணியில் இருக்கிறது.  Every year the UNITED NATIONS is releasing a rank list of the happiest children in the world. And Finland always tops the list.

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.  It is of course natural that children who are happy to show lot of interests in learning new things.

👍 பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். Foreign educators and officials throng Finland to know more about their unique education system.

உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்.  About 15,000 people from 56 countries visit Finland every year.

நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.  They earn a substantial amount of foreign exchange from this.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது.  In Finland, a teacher's job commands a respect equivalent to IAS, IPS in our country.

அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.  Teachers play an important role in the formation of governments policies and their implementation too.

 மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்..  A third of the children dream of becoming a teacher in their lifetime.

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..  At the same time, becoming a teacher here is not an easy job.

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  The toppers of the high school students are selected for teacher training.

ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்.  First they will have to undergo 5 years of vigorous training in a boarding school.

பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. Then they should undergo 6 months of military training.

ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சிFor one year they should undergo direct classroom teaching training in different schools.

ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்.. குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது. Then they should do a Project from a subject. They should also participate in children's rights workshops.

நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ். And get certificates from National Boards regarding the Laws of the country.

தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று. And get certificates relating to fire fighting, self defense and first aid.

என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்.  A person should spend around 7 years for becoming a teacher.

இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!... It is this exceptional training given for a teacher that had helped them bring about extraordinary changes in education.

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!. Let us learn from Finland's education system and try to change to a better system.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!. And bring about a better future for our children.

நன்றி : செந்தில் மெடிக்கல்ஸ், செவ்வாய்ப்பேட்டை, சேலம், தென் இந்தியா.

Thanks to
SENTHIL MEDICALS, Salem 2.

Collected by

Ezhilarasan Venkatachalam
Salem
English training though Tamil
.

Comments

Popular posts from this blog

How to play with your child List translation Ezhilarasan

Match stick and LENS // EZHILARASAN CHILDCARE ARTICLE