WHY WE HAVE CHILDREN ? Translation // Ezhilarasan childcare
WHY WE HAVE CHILDREN ? Translation
நமக்கு குழந்தைகள் எதற்காக இருக்கிறார்கள் ?Gifted scholar Zhao Jie from the University of Beijing wrote as follows:
பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் இருந்து அறிஞர் ஜாவோ ஜீ
பின்வருமாறு எழுதுகிறார் :
I admire those parents who are able to forge extremely strong and close bonds with their children when they were young...
தங்கள் குழந்தைகளிடம் அவர்கள் இளம் வயதில் மிகவும் வலுவான நெருங்கிய உறவு வைத்திருக்க முடிந்த பெற்றோரை கண்டு நான் தலை வணங்குகிறேன்.
..and yet they know when to let go in a timely and appropriate manner when the children have grown up* .
அதே போல, தங்கள் குழந்தைகள் வளர்ந்த பின் ஒரு சரியான நேரத்தில், பொருத்தமான முறையில் அவர்களிடம் இருந்து விலக தெரிந்த பெற்றோரை கண்டும் நான் தலை வணங்குகிறேன்.
*Taking care of and raising children and then letting go of them are parents' basic and mandatory duties*''.
குழந்தைகளை கவனித்து கொள்வது, அவர்களை வளர்ப்பது, பின்னர் அவர்களை தங்கள் பாதையில். செல்ல அனுமதிப்பது இரண்டும் பெற்றோர்களின் அடிப்படை கடமைகள்.
The parent- child relationship is not a type of relationship that is permanently with the parents being in control.
இந்த பெற்றோர் - குழந்தை உறவு
நிரந்தரமாக பெற்றோர் கட்டுப்பாடு மட்டுமே கொண்ட ஒரு உறவு அல்ல.
It is a special and profound relationship brought about by fate;
இது விதியின் மூலம் நிகழ்ந்த ஆழமான, சிறப்பான ஒரு உறவு.
..we must not let the child feel deprived or lacking when they were young...
குழந்தைகள் அவர்கள் இளம் வயதில் தாங்க உதாசீனப்பட்டதாக உணரக் கூடாது...
...and neither should we let them feel stifled when they have grown up.
அவர்கள் வளர்ந்த பின் அவர்கள் அடக்கப்படுவது போலவும் உணரக் கூடாது.
The role of parents is a journey of love and wisdom.
பெற்றோர்கள் பங்கு ஒரு அன்பும் ஞானமும் நிறைந்த வாழ்க்கை பயணத்தில் ஒரு வழிகாட்டியாக மட்டுமே உள்ளது.
Not only in one's role as parents, but also in life there are many moments that we need to understand when to advance and retreat.
பெற்றோர்களாக மட்டும் இல்லை, நாம்
பல தருணங்களில் வாழ்க்கையில்
எப்போது பின்வாங்க வேண்டும், எப்போது முன்னிலையில் இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
Very often people wonder why do we have children?
அடிக்கடி மக்கள் நமக்கு குழந்தைகள் எதற்காக இருக்கிறார்கள் என்று யோசனை செய்வது உண்டு.
Is it to carry on the family's name or to raise children to take care of us in old age*?
நம் குடும்ப நல்ல பெயரை தொடரவா? அல்லது வயதான பின் நம்மை பார்த்துக் கொள்ளவா நாம் குழந்தைகளை வளர்கிறோம்?
Finally, I found a very touching answer:
இறுதியாக, மனதை தொடும் பதில் ஒன்று எனக்கு கிடைத்தது :
*the reason for having children is both to give and to appreciate*.
அன்பை கொடுக்கவும் பாராட்டு தெரிவிக்கவும் தான் நமக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்.
We should not ask for perfection in our children, ...
நம் குழந்தைகள் எல்லாவற்றிலும் மிக சரியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது...
...neither should we expect them to win credits to honour the family
...அவர்கள் பல சாதனைகள் செய்து நம் குடும்ப புகழை கூட்டவும் கட்டாயப் படுத்தவும் கூடாது..
... nor should we want them as an insurance for old age.
மற்றும் வயதான காலத்தில் உதவும் "இன்ஸ்சூரன்ஸ் பாலிசி" ஐ போலவும் அவர்களை கருதக் கூடாது.
We should only ask for them to be healthy
நாம் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க
வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்த வேண்டும்.
.. and to let us have the chance to walk with them through this journey of life in this beautiful world*.
... மற்றும் இந்த அழகான வாழ்க்கை பயணத்தில் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க ஒரு வாய்ப்பு மட்டும் அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்க வேண்டும்.
This is such a beautiful verse that we have to remind ourselves;
இது ஒரு அழகான வாக்கியம் ஆகையால் இதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்..
...to pick a way to love our children!
நாம் நம் குழந்தைகள் மேல் அன்பு செலுத்த ஒரு வழியை தேர்ந்து எடுக்க வேண்டும்
All we ask is for them to be healthy and happy.
அவர்களை நாம் கேட்டுக் கொள்வது எல்லாம் .... அவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பது மட்டுமே.
It is an amazing read for all of us ... the parents!.
இது எல்லா பெற்றோர்களும் வாசிக்க வேண்டிய ஒரு அற்புதமான கட்டுரை.
ஆங்கிலத்தில் எழுதியது
"யாரோ"
தமிழ் மொழிபெயர்ப்பு
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
Collected and translated in Tamil by
Ezhilarasan Venkatachalam
Thanks to
MURALI J, HCMS78
for suppling me the English source.
Comments
Post a Comment