பாடம் மட்டுமே போதுமா? Childcare Ezhilarasan
பாடம் மட்டுமே போதுமா! கடவுளின் நாக்கு 50: ஒரு பள்ளி ஆசிரியையிடம் பேசிக் கொண் டிருந்தேன். மனதில் இருந்த ஆதங்கங்களைக் கொட்டத் தொடங்கினார். ‘‘இப்போதெல்லாம் பசங்க படிக்கிறதுல, நல்ல மார்க் வாங்குறதுல முன்பைவிட ரொம்ப முன்னேறியிருக்காங்க. ஆனா, அவங்க பழக்கவழக்கம், எண்ணங்கள் தான் ரொம்ப மோசமாகிட்டு வருது. குறிப்பா செல்போன், இன்டர்நெட், சோஷியல் நெட்வொர்க் மூலமா பசங்க எதையெல்லாம் கத்துக்கிடக் கூடாதோ, அத்தனையும் ஈஸியா கத்துகிடுறாங்க. அவங்க மனசைக் கெடுக்கிறதுல பெரிய பங்கு செல்போனுக்கு இருக்கு. ஒரு டீச்சரா இதை தடுக்க முடியலையேன்னு வருத்தப்படுறேன். வகுப்பறையில் நான் செல்போனை தடுக்க முடியும். ஆனா, பள்ளியைவிட்டு வெளியே போனதும் அவன் கையில் போன் வந்துருதே. என்ன செய்யறது? பசங்க செல்போனை எப்படி பயன்படுத்துறாங்கன்னு, வீட்டுல யாரும் கவலைப்படுவதே இல்லை. ஆபாசப் படம். ஆபாசப் பாட்டு. வீடியோகேம், சாட்டிங். நினைக்கவே முடியாத பயங்கரம் எல்லாம் ஈஸியா நடந்துட்டு இருக்கு. இது பையனுங்கப் பிரச்சினை மட்டுமில்லை. பொண்ணுகளையும் சேர்த்துதான். என் ஸ்கூல்ல பத்தாம் வகுப்புப் படிக்கிற பையன் என்னை டீச்சர்னுகூட நினை...