TAMIL -CORONA period and children's mental health VENKATACHALAM SALEM
Tamil the Hindu Thisai newspaper கரோனாவும் குழந்தைகள் / மாணவர்களின் மன நலப் பாதுகாப்பும் - - முகமது ஹுசைன் . தி இந்து தமிழ் திசை நாளிதழ் Dated : 28 Aug 2021 (நலம் வாழ) -=-=-=-=-=-=-=-=-=-=- இரண்டு உலகப் போர்கள் கொண்டுவந்த பேரழிவுகளுக்கும் மேலான பாதிப்புகளை இந்த கரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது, ஏற்படுத்திவருகிறது. கடந்த 20 மாதங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள், வேலையிழப்புகள், கூடுதல் பணி அழுத்தம், உடல் நல ஆபத்துகள், மன அழுத்தம், மன அதிர்ச்சிகள், துயரங்கள், வன்முறைகள் போன்றவை இதுவரை நாம் சந்தித்திராதவை. இவை ஏற்படுத்திய மன நலப் பாதிப்பு பெரியவர்களை மட்டுமல்ல; குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. குழந்தைகள் மென்மையானவர்கள். அவர்களின் அறிவாற்றலும் உணர்வு முதிர்ச்சியும் பெரியவர்களைப் போன்று இருப்பதில்லை. இதனால், பெருந்தொற்றால் வீட்டுக்கு உள்ளும் வெளியிலும் ஏற்படும் மாற்றங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதித்துள்ளன. -=-=-=-=-=-=-=-=- நழுவும் பிடிமானங்கள் பெரியவர்களுக்குத் தொற்றுநோயால் ஏற்படும் மன அழுத்தம் தெளிவானது, வெளிப் படையானது. ஆனால், குழந...