Posts

Showing posts from March, 2022

Tamil -How to make your child successful -

Image
குழந்தைகளை வெற்றிகரமானவர்களாக உருவாக்குவது எப்படி? - சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்/எழுத்தாளர்.  நன்றி : தி இந்து தமிழ் திசை நாளிதழ் --  0 9 Mar 2022  ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.  குழந்தைகளுக்கு அவர்கள் சொல்லும் அறிவுரைகள், போதனைகள், கட்டுப்பாடுகள் என அனைத்துமே இதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ~ வாழ்க்கையில் வெற்றியாளர்களாக நமது குழந்தைகள் மிளிர்வதற்கு அவர்களை எந்தெந்த வகையில் தயார்செய்ய வேண்டும், என்னென்ன கற்றுக்கொடுக்க வேண்டும், எப்படியெல்லாம் நமது குழந்தையை மாற்ற வேண்டும் என எப்போதும் யோசிக்கும் பெற்றோர்கள், அதற்காகச் சில விஷயங்களில் தங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும். ~பெற்றோர்களே இல்லாத குழந்தைகள்கூட வாழ்க்கையில் வெற்றியாளர்களாக மாறியிருக்கின்றார்கள். அதனால், குழந்தைகளின் வெற்றிக்குப் பெற்றோர்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.  ~ ஆனால், ஒரு குழந்தை தோற்றுப்போவதற்கு ஏதோ ஒரு வகையில் பெற்றோர்களின் மாற்றிக்கொள்ளாத பிடிவாதமான அணுகுமுறைகள் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் ...