FREE SPOKEN ENGLISH THROUGH TAMIL VASANTHI DEVI ARTICLE
Vasanthi Devi -Scary Yellow School Vans - Tamil குழந்தைகளை மிரட்டும் மஞ்சள் வாகனங்கள்! வே. வசந்தி தேவி . . அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்டது. குழந்தைகளின் தூக்கமும், உணவும், விளையாட்டும் தொலைந்து விட்டன. காலை ஏழு மணிக்கெல்லாம் தனியார் பள்ளி மஞ்சள் நிற வாகனங்கள் மூலை முடுக்குகளில் இருக்கும் கிராமங்களுக்குள் அட்டகாசமாக நுழைகின்றன. அரைத் தூக்கத்தில் இருக்கும் குழந்தைகளை வெறும் வயிற்றோடு வாரிச் சுருட்டிக்கொண்டு, எங்கோ இருக்கும் பள்ளிகளில் போய்க் கொட்டுகின்றன. பிற்பகல் 4 மணிக்கு எதிர்த் திசைப் பயணம். ஒவ்வொரு வாகனமும் தினந்தோறும் 50 கி.மீ. தூரம் செல்கின்றன. மூன்று வயதுக் குழந்தையிலிருந்து தொடங்குகிறது இந்த வன்முறை. இவர்களின் கிராமங்களில் எல்லாம் பள்ளிகள் இல்லையா? இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் அரசுப் பள்ளிகள். அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால் பெற்றோரின் அந்தஸ்து என்னாவது? பெருநகரங்களிலும் 9 மணிப் பள்ளிக்கு 7 மணிக்கெல்லாம் பள்ளி வேனில் ஏறுவதே குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை. ஒவ்வொரு வீட்டின் முன்பும் புத்தகப் பையுடன் நிற்கும் குழந்தை; வீடுதேடி வரும் பள்ளி வாகனங்கள் - நான் த...